நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரசிகர்கள் எதிர்பார்ப்பில் சலார் டிரைலர்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள சலார் திரைப்படத்தின் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2023, 6:25 am

DIN

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரம்மாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர்  பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சலார் திரைப்படம்  வரும் டிச.22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வரும் இன்று இரவு 7.19க்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக, சலார் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் ரசிகர்கள் இந்த டிரைலருக்காகக் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.