பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்: சூர்யா

விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப் படம்.
Updated On :3 டிசம்பர் 2023, 3:35 pm

DIN

விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காய்ச்சலுடன் கூடிய தொடர் இருமல், சளி பாதிப்புக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல் நிலையில், சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாச சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, விஜயகாந்த்தின் உடல்நிலை மோசமடைந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை வெளியே நேற்று தேமுதிக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தனியார் மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவிந்ததால், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.