மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அல்லு அர்ஜுனின் இதயத்தை உடைத்த நடிகை: யாரிந்த ட்ரிப்தி டிம்ரி? 

அனிமல் படத்தில் நடித்த நடிகை ட்ரிப்தி டிம்ரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். 

News image
Updated On :11 டிசம்பர் 2023, 6:50 am

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

Story image

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பதிவில் அனிமல் படத்தினை இந்திய சினிமாவின் கிளாசிக் எனப் பாராட்டியுள்ளார். மேலும், “இந்த இளம் பெண் ட்ரிப்தி டிம்ரி இதயத்தை உடைக்கிறார். இன்னும் அதிகமாக உடைக்க வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார். 

Story image

ஏற்கனவே சமூக வலைதளங்களில் ட்ரிப்தி டிம்ரி இந்தியாவின் ‘புதிய நேஷ்னல் க்ரஷ்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். படத்தில் வரும் ‘அண்ணி-2’ என்ற வார்த்தையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது. 

2017இல் போஸ்டர் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானாலும் லைலா மஜ்னு, புல்புல் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார். இதையெல்லாம்விட அனிமல் படத்தில் ‘ஜோயா’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறார். 

இவரது அழகான தோற்றம் மட்டுமின்றி கச்சிதமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. 

Story image

ட்ரிப்தி டிம்ரியின் இன்ஸ்டாகிராமில் கடந்த வாரம் 711ஆயிரம் பேர் பின்தொடர்பவர்களாக இருந்தனர்.  தற்போது 30 இலட்சம் (3 மில்லியன்) ஆக அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு டிரெண்டாகி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.