திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

லால் சலாம் படத்தின் முதல் பாடல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :17 டிசம்பர் 2023, 8:08 am

DIN

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் படிப்பிடிப்பு முடிந்தநிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோருக்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.

Story image

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் ‘தேர் திருவிழா’ நாளை (டிச.18) மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.