நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிரசாந்த் நீல் கதை: ஹொம்பாலே ஃபிலிம்ஸின் தயாரிப்பில் பஹீரா டீசர்! 

ஹொம்பாலே ஃபிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் டீசர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

News image
Updated On :17 டிசம்பர் 2023, 7:24 am

DIN

கேஜிஎஃப், காந்தாரா, சலார் ஆகிய படங்களை தயாரித்துள்ள ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பஹீரா படம் உருவாகியுள்ளது. 

கேஜிஎஃப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீலின் பஹீரா கதையை இயக்கியுள்ளார் இயக்குநர் டாக்டர் சூரி. இவர் 2012இல் யஷ் வைத்து லக்கி எனும் படத்தினை இயக்கியுள்ளார். 

பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் படத்தில் கதையில் வசனம் எழுதியுள்ளார் டாக்டர் சூரி. 

Story image

இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். இவர் பிரசாந்த் நீலின் தங்கையை திருமணம் செய்துள்ளார். பிரசாந்த் நீலின் முதல் படத்தின் (உக்ரம்) நாயகனும் இவர்தான். கன்னடாவில் கண்டி, உக்ரம் ஆகிய படங்களின் மூலம் மிகவும் கவனம் பெற்ற நடிகராக அறியப்படுகிறார் ஸ்ரீமுரளி. 

இந்தப் படத்டின் டீசர் இன்று வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கே.ஜி.எஃப் படத்தின் மேக்கிங் சாயல் படத்தின் டீசரில் காண முடிகிறது. ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்தால் அது சிறப்பான படமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.