பிக்பாஸ் வெற்றியாளர் கைது!

தெலுங்கு பிக்பாஸ் வெற்றியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வெற்றியாளர் கைது!

பிக்பாஸ் போட்டிகள் பான் இந்திய மொழிகளில் நடைபெற்று வருகிறது. தமிழில் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கில் நாக சைதன்யா உள்ளிட்டோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் யூடியூபர் பல்லவி பிரசாந்த் என்பவர் வெற்றி பெற்றார். 

இறுதிப்போட்டியில் அவர் வென்று, ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்ததும் அவரின் ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்றார். அப்போது, ரசிகர்கள் சிலர் தோல்வியடைந்த போட்டியாளர்களின் கார்களைக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். மேலும், பொது மக்களுக்கு இடையூறான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்ந்து, பல்லவி பிரசாந்த் மீதும் அவரின் ரசிகர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. தற்போது, பல்லவி பிரசாந்த் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிக்பாஸின் டைட்டில் வின்னர், தன் ரசிகர்களாலேயே கைது ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com