அமீரின் மாயவலை: முதல் பாடல் வெளியீடு எப்போது?
அமீரின் மாயவலை படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


அமீரின் மாயவலை படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அமீர், பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 2009-ல் யோகி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் அமீர் நடித்திருந்தார். இவர், மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைப் பிறகு அமீர் கதாநயாகனாக நடிக்கும் திரைப்படம் மாயவலை. இந்தப் படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இந்தப் படத்தினை வெளியிடுகிறார்.
இப்படத்தின் டீசரை வெளியாகி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இதையும் படிக்க: சலார் 2-வது பாடல்!
இந்த நிலையில், மாயவலை படத்தின் முதல் பாடல் டிச. 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...