நிகரில்லாத சினிமாட்டிக் வெற்றி: அனிமல் 3வது வார வசூல் விவரம்!

சந்தீப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தின் 3வது வார அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
நிகரில்லாத சினிமாட்டிக் வெற்றி: அனிமல் 3வது வார வசூல் விவரம்!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

முதல் நாளில் ரூ. 116 கோடி வசூலித்தது. திருவிழா அல்லாத நாள்களில் வெளியாகி இவ்வளவு வசூலித்த படங்களில் இதுதான் முதன்முறை என படக்குழு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

நடிகர் அல்லு அர்ஜுன் படத்தினை கிளாசிக் என்று புகழ்ந்துள்ளார். ரசிகர்களின் பேராதரவில் சென்னையில் 2வது வாரத்தில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டன. 

முதல் ஒரு வாரத்தில் ஜெட் வேகத்தில் வசூலித்த அனிமல் படத்தின் வசூல் 3வது வாரத்தில் குறைந்துள்ளது. ஆயிரம் கோடியை எட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில் படக்குழு 3வது வாரத்தின் வசூல் விவரத்தினை விவரத்தினை வெளியிட்டுள்ளது. இதுவரை அனிமல் படம் ரூ. 862.21 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ள படக்குழு ‘நிகரில்லாத சினிமாட்டிக் வெற்றி’ எனவும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com