புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இதயத்தை மட்டுமல்ல பாக்ஸ் ஆபீஸிலும் வென்ற டன்கி!

ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்திருக்கும் டன்கி திரைப்படம் 2வது நாளில் வசூலில் கலக்கியுள்ளது. 

News image
Updated On :24 டிசம்பர் 2023, 6:45 am

DIN

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படம் ரூ. 1200 கோடி வசூலித்தது. 

தொடர்ந்து, பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் டாப்ஸி, விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 

உலகளவில் வெளியான இப்படம் இதுவரை விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 

உலகம்  முழுவதும் ரூ. 58 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் முதல்நாளில் ரூ. 129.6 கோடி வசூலித்தது. டன்கி படம் இதில் 50 சதவிகிதத்தைக்கூட வசூலிக்கவில்லை. ஆக்‌ஷன் அல்லாத படங்களுக்கு இது சகஜம் என விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். 

Story image

இந்நிலையில் 2வது நாளில் ரூ.103.4 கோடி வசூலித்துள்ளது. இதயத்தை மட்டுமல்ல பாக் ஆபீஸிலும் கலக்கி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.