ஐமேக்ஸ் தரத்தில் கேப்டன் மில்லர்!

தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாக உள்ளது.
ஐமேக்ஸ் தரத்தில் கேப்டன் மில்லர்!
Updated on
1 min read

அருண் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ்  தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரையில் வெளியாக உள்ளது கேப்டன் மில்லர்.

சமீபத்தில் படத்தின் முதல் பாடலான கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில், இப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக, தமிழில் லியோ திரைப்படம் ஐமேக்ஸ் தரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com