பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் விஜய், ஷாருக்கான்?

பிரபல இயக்குநர் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் விஜய், ஷாருக்கான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

பிரபல இயக்குநர் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் விஜய், ஷாருக்கான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்கிற புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

அதேபோல், நீண்ட நாள்களுக்குப் பின் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படமும் ரூ.900 கோடி வசூலித்து பாலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கரின் மிகப்பிரம்மாண்டமான படத்தில் நடிக்க விஜய் மற்றும் ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது, ஷங்கர் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தையும் ராம்சரணை வைத்து ‘ராம்சரண் 15’ படத்தையும் இயக்கி வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் தண்ணீரை மையமாக வைத்து சைன்ஸ் பிக்சன் படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.

ரூ.1000 கோடியில் உருவாகும் இப்படத்தில் நாயகர்களாக விஜய்யும் ஷாருக்கானும் நடித்தால் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளைச் செய்யலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.