காதல் தோல்வியென்றால் இந்தப் பாடலை கேளுங்கள்: நடிகர் நானி 

நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தசரா’ படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. 
காதல் தோல்வியென்றால் இந்தப் பாடலை கேளுங்கள்: நடிகர் நானி 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. அவரது முந்தைய படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து நானி 'தசரா' எனும் புதிய படத்தில் நடித்து வந்தார். இதன் முதல் பார்வை போஸ்டரில் நடிகை சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இருந்தது. அப்போதிலிருந்தே இந்தப் படத்திற்கான ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. சுதாகர் செருகுரி தயாரித்து உள்ளார் இதில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மாநகரம், கைதி புகழ் சத்தியன் சூர்யன். 

திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 30ஆம் நாள் வெளியாகுமெனவும் அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தியென பான் இந்தியப் படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். தெலுங்கில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் இந்தப் பாடல் நாளை வெளியாகும். காதல் தோல்வி குறித்த பாடல் என்பதால் நாளை (பிப்.14) காதலர் தினத்தன்று மிகப்பெரிய வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் பாடல் வெளியீட்டின்போது நடிகர் நானி பேசியதாவது: 

எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. தனிப்பட்ட முறையில் நான் நம்பும் தத்துவத்திற்கு அருகில் உள்ள பாடல் இது. ஒரு பெண் நமக்கில்லை என்றான பிறகு ஒதுங்கி விட வேண்டும். நமக்கான பெண் வேறெங்கோ இருப்பார். காதல் தோல்வியென்றால் கஷ்டப்படுங்கள். இந்தப் பாட்டை கேளுங்கள். அமைதியாக நல்ல பிள்ளையாக வீட்டிற்குள் சென்று படுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பாட்டு மெதுவான விஷம் மாதிரி இருக்கிறது. படப்பிடிப்பின்போதே இந்தப் பாடல் மிகவும் பிடித்திருந்தது. நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும். தியேட்டரில் இந்த பாடலை பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com