நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'நினைத்தாலே இனிக்கும்' நேரத்தில் ஒளிபரப்பாகும் 'சீதா ராமன்'!

'ரோஜா' தொடர் புகழ் பிரியங்கா நல்காரி நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள சீதா ராமன் தொடர் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 4:28 pm

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' தொடர் புகழ் பிரியங்கா நல்காரி நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள 'சீதா ராமன்' தொடர் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்தத் தொடரில் பிரியங்கா நல்கார் - சிபு சூர்யன் ஆகியோர் 'ரோஜா' - அர்ஜுன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  இந்த தொடர் குடும்ப ரசிகர்களையும் தாண்டி இளைஞர்கள் மத்தியிலும் பெரிதாகப் பேசப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து பிரியங்கா நல்காரி தற்போது ஜீ தமிழின் புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். 'சீதா ராமன்' எனப் பெரியரிடப்பட்டுள்ள அந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ கடந்த வாரம் வெளியானது. 

இந்தத் தொடரின் கதாநாயகியாக பிரியங்கா நடிக்கிறார். திருமணமாகி செல்லும் நாயகி, அழகை காரணம் காட்டி முதல் நாளிலேயே புகுந்தவீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதைப் போன்று முன்னோட்ட விடியோ வெளியாகியிருந்தது. 

Story image

எனினும் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது 'சீதா ராமன்' தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என ஜீ தமிழ் அறிவித்துள்ளது. 

இந்த நேரத்தில் நினைத்தாலே இனிக்கும் தொடர் ஒளிபரப்பாகிவந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.