மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

டிரெண்டிங்கில் ‘அரபிக் குத்து’: எதனால்?

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில்  விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ’அரபிக் குத்து' பாடல் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றது.

News image
Updated On :14 பிப்ரவரி 2023, 10:25 am

DIN

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில்  விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ’அரபிக் குத்து' பாடல் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இதனால் இயக்குநர் நெல்சன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

இதையும் படிக்க | காதலர் தினத்தன்று காதலை உறுதிப்படுத்திய ’விக்ரம்’ பட நடிகர்!

பீஸ்ட் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. குறிப்பாக அரபிக் குத்து வெளியாகி இந்திய அளவில் பிரபலமானது. இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்தனர். சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களும் வைரலாகின. 

அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடினர். புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி இந்தப் பாடலுக்கும் நடனம் அமைத்திருந்தார். இந்த ‘அரபிக் குத்து’ விடியோ பாடல் யூடியூப்பில் 390 மில்லியன்(39 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது. 

அரபிக் குத்து விடியோ பாடல் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.