இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

’அயலி’ இயக்குநரை பரிசளித்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!

அயலி இணையத் தொடர் இயக்குநருக்கு பரிசளித்து பாராட்டியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Published On :

அயலி இணையத் தொடர் இயக்குநருக்கு பரிசளித்து பாராட்டியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள இணையத் தொடர் ‘அயலி’.

பருவத்திற்கு வந்த சிறுமிகளின் படிப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கொண்ட ஊரில் படிப்பைத் தொடரும் சிறுமியின் கதையாக உருவான இத்தொடர் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்று அசத்தி வருகிறது.

இந்நிலையில்,  நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ‘அயலி’. ஜீ5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன்.’ என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.