புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்

பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 9:38 am

DIN

பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் இளைய மகளான ஜான்வி கபூர் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தமிழில் வெற்றிபெற்ற கோலமாவு கோகிலா பட ஹிந்தி ரீமேக்கான 'குட் லக் ஜெர்ரி'யில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடித்திருந்தார். இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து சில ஹிந்தி படங்கள் சுமாரான வெற்றியைத் தந்தன.

இதற்கிடையே, தமிழில் ஜான்வி கபூர் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் பரவி வந்தது. இத்தகவலை மறுக்கும் விதமாக ஜான்வி கபூர் இதுவரை எந்தத் தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் அவரின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்திருந்தார்.

Story image

இந்நிலையில், ஜான்வி கபூர் விரைவில் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நடிகை ஜான்வி கபூர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.