இயக்குநர் மோகன்.ஜி இயக்குநர் பா.இரஞ்சித்தைப் பாராட்டியுள்ளார்.
திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். பகாசூரன் வருகிற பிப்.17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மோகன்.ஜியிடம் பா.இரஞ்சித் குறித்து கேள்விகேட்கப்பட்டது.
இதையும் படிக்க: 'என்னை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்..’: பிரபல நடிகர் உருக்கம்
அதற்கு மோகன்.ஜி, ‘பா.இரஞ்சித் தன் மக்களுக்கான உரிமையைப் பேசுகிறார். அது எனக்குப் பிடித்திருக்கிறது. சார்பட்டாவிலேயே தான் சிறந்த கலைஞர் என நிரூபித்துவிட்டார். இன்னும் அவர் பெரிய இடத்திற்கு போவார். ஆனால், நான் திரௌபதி எடுத்த காரணத்திற்காக ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை எடுத்தார். இந்த மாதிரி தடம் மாற வேண்டாம். அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்னையைப் பேசினால் போதும் என நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையா் உ.பி.யில் கைது
போலி வங்கி கணக்கு மூலம் இணையவழி மோசடிக்கு உதவி: வங்கி ஊழியா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


