பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம்: டிரெய்லர் வெளியானது
லவ் அகைன் படம் மே 12 அன்று வெளியாகவுள்ளது.


பிரியங்கா சோப்ரா நடித்த ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
2002-ல் தமிழன் படம் மூலமாக நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார். 2018 டிசம்பரில் பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ராஜஸ்தான் - ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா நடித்த லவ் அகைன் என்கிற ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் டி. ஸ்டிரெளஸ் இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, சாம், ரஸ்ஸல் டோவி போன்றோர் நடித்துள்ளார்கள். 2016-ல் வெளிவந்த ஜெர்மன் மொழிப் படத்தின் ரீமேக் இது.
லவ் அகைன் படம் மே 12 அன்று வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...