’கூடுதல் பலத்துடன்..’ உடற்பயிற்சி விடியோவைப் பகிர்ந்த சமந்தா!
நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார்.


நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை. திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த சில படங்களிலிருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை சமந்தா தரப்பு மறுத்திருந்தது.
இதையும் படிக்க: வெளியானது ’தங்கலான்’ விக்ரம் புகைப்படங்கள்
அவர் நடிப்பில் உருவான ‘சாகுந்தலம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் தன் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக சமந்தா பழனி மலைக்கோயிலில் 600 படிகளில் சூடம் ஏற்றியபடியே முருகனை தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
இந்நிலையில், சமந்தா இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டு ’2023 நாம் பலம் பெறும் ஆண்டு’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...