மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

‘சில உறவுகள் வார்த்தைகளை தாண்டியது...’- வாரிசு பட பாடலாசிரியர் நெகிழ்ச்சி! 

வாரிசு திரைப்படத்தின் பாடலாசிரியர் விவேக் நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தினைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :19 பிப்ரவரி 2023, 4:54 am

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்து விட்டது. தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் வாரசுடு வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் ஜன.14இல் வெளியாகியது. 

ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கினாலும் வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை. தமனின் பாடலுக்கு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை நடனம் ஆடுவதை இணையத்தில் பார்க்க முடிந்தது.

வாரிசு படம் 26 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரூ.310 கோடிக்கும் அதிகமாக வசூலனாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரிசு படத்தின் பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்தது. விவேக் பாடல்கள், தமனின் இசை படத்திற்கு பலம் சேர்த்தது. 

இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் நடிகர்  விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவர் கூறியதாவது: 

சில உறவுகள் என்பது வார்த்தைகளை தாண்டியது. இந்த நம்பமுடியாத பயணத்தில் நீங்கள் என் மீது காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை சகோதரன் போல உணர்த்தியது. நான் வேண்டுவதெல்லாம், உங்களைப் போன்ற நல்ல மனிதருக்கு எல்லாம் நன்றாகவே நடக்க வேண்டுமென்பதே. என்னுடைய கலைப் பயணத்தில் இந்த அழகான நாள் போல எதுவும் இருக்காது. வாழ்நாளெல்லாம் உங்களை அன்பு செய்கிறேன் என் தளபதியே. 

Related Article

‘காலம் தப்பி பிறந்துவிட்டேன்; இருந்தாலும் சம்யுக்தாவை காதலிக்கிறேன்’- இயக்குநர் பாரதிராஜா!

நடிகை அதிதி ராவின் காதலர் தின பதிவிற்கு சித்தார்த்தின் கமெண்ட் என்ன தெரியுமா?

‘உங்களால்தான் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறேன்’ - நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!

நடிகர் மயில்சாமி காலமானார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.