'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நடிகை சம்யுக்தா மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் களரி படத்தில் அறிமுகமாயிருந்தார்.

'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. பிப்.4ஆம் தேதி இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா பேசியதாவது:
வயதில் சிறியவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் தனுஷ், ஜி.வி.காலில் விழுவேன். ஜி.வி. பிரகாஷ் கடவுளின் குழந்தை. தனுஷ் சிறந்த கலைஞன் மற்றும் நல்ல மனிதன். சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது. கடலோர கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். இப்போது சம்யுக்தாவை பார்க்கும்போது காலம் தப்பி பிறந்து விட்டோனோ என தோன்றுகிறது. அவரை காதலிக்காமல் இருக்கவில்லை. இருந்தாலும் இப்போதும் சம்யுக்தாவை காதலிக்கிறேன்.
Related Article
நடிகை அதிதி ராவின் காதலர் தின பதிவிற்கு சித்தார்த்தின் கமெண்ட் என்ன தெரியுமா?
‘உங்களால்தான் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறேன்’ - நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!
‘லியோ’ படத்தில் த்ரிஷாவின் தோற்றம் இதுவா?- வைரலாகும் த்ரிஷாவின் புகைப்படம்!
காதலர் தினத்தன்று காதலை உறுதிப்படுத்திய ’விக்ரம்’ பட நடிகர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



