நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீண்டும் இணைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள்: வைரல் புகைப்படங்கள்!

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

News image

கோப்புப்படம்

Updated On :21 பிப்ரவரி 2023, 11:52 am

DIN

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்தாண்டு அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-வது முறையாக தொகுத்து வழங்கினார்.

இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் அஷீம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டி முடிவடைந்து ஒரு மாதமாகும் நிலையில், மகேஸ்வரியின் வீட்டிற்குச் சென்ற சக போட்டியாளர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Story image

செரினா, ரச்சிதா, விக்ரமன், அசல், செரினா, ஏடிகே, ராம், சிவின் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மகேஸ்வரி பதிவிட்டுள்ளார்.

Story image

மற்றொரு புகைப்படத்தில் சிவின், மகேஸ்வரி, ரச்சிதா மற்றும் செரினா மட்டும் உள்ளனர்.

மகேஸ்வரி இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அஷீம், மணிகண்டா, தனலட்சுமி, ஆயிஷா, மைனா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிகின்றது.

இந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து பிக் பாஸ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.