தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசியலுக்கு வருவீர்களா? ரசிகரின் கேள்விக்கு கங்கனா பதில்

அரசியலுக்குள் எப்போது நுழைவீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை கங்கனா ரணாவத் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

News image

நடிகை கங்கனா ரணாவத்

Updated On :21 பிப்ரவரி 2023, 10:18 am

DIN

அரசியலுக்குள் எப்போது நுழைவீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை கங்கனா ரணாவத் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் கங்கனா ரணாவத். தமிழில் தாம்தூம் மூலம் அறிமுகமான இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுகளை பெற்றார்.

தற்போது தமிழில் சந்திரமுகி 2 படத்திலும், ஹிந்தியில் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எமர்ஜென்சி திரைப்படத்தை கங்கனாவே இயக்கி வருகிறார்.

இதையும் படிக்க | பதான் ரூ.1,000 கோடி வசூல்!

இதற்கிடையே, அவ்வப்போது அரசியல் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடும் கங்கனா சர்ச்சையில் மாட்டிக் கொள்வதும் உண்டு.

இந்நிலையில், டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு கங்கனா பதிலளிக்கையில், ‘அரசியலுக்குள் எப்போது நுழைவீர்கள்?’ என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Story image

இந்த கேள்விக்கு பதிலளித்த கங்கனா, அதை நான் உறுதியாக சொல்ல முடியாது. கலைக்காக இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியது உள்ளது என பதிலளித்திருந்தார்.

மேலும், சினிமா சார்ந்து ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு டிவிட்டரில் கங்கனா பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.