ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டாரா? பத்திரிகையாளரை சந்தித்த ரஜினி ரசிகர்கள்!

பிரபல யூடியூபர் பிஸ்மி அவர்களின் சூப்பர் ஸ்டார் குறித்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் அவரை சந்தித்தது சர்ச்சையாகி வருகிறது. 
ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டாரா? பத்திரிகையாளரை சந்தித்த ரஜினி ரசிகர்கள்!
Published on
Updated on
1 min read

வலைப்பேச்சு யூடியூபில் பிரபலமானவர் ஜே. பிம்ஸி. இவர் பத்திரிகையாளர், திரைப்பட விமர்சகர் என்றும் அறியப்படுகிறார். இவர் சமீபத்தில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளானது.

அந்த நேர்காணலில், “ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தார். அவர் இப்போது முன்னாள் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். நடிகர் விஜய்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார். தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியதில் எந்த தவறும் இல்லை. விநியோகஸ்தர்கள்கூட இதை ஏற்றுக் கொள்வார்கள்” என கூறியிருந்தார். 

இதனால் ஆவேசமடைந்த ரஜினி ரசிகர்கள் பிஸ்மியை சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இது குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய்தான் நம்பர்.1 என சமீபத்தில் தெரிவித்ததும் சர்ச்சையானது. பின்னர் நடிகர் சரத்குமாரும் இதே கருத்தை முன்வைத்தார்.

இந்நிலையில், பிஸ்மி கூறியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் “முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்த் அவர்களை குறிப்பிட்டதற்காக ஊடகவியலாளர் பிஸ்மியின் அலுவலகம் சென்று மிரட்டும் தொணியில் பேசியுள்ள ரஜினிகாந்த் ரசிகர்களுடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிஸ்மி அவர்கள் குறிப்பிட்டதில் எந்த தவறும் இல்லை” என பிஸ்மிக்கு ஆதரவாக பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com