நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜமௌலி அல்லாத தெலுங்குப் படத்தின் வசூல் வேட்டை: ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாட்டம்!

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் ‘தமாகா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்று வருகிறது. 

News image
Updated On :2 ஜனவரி 2023, 12:55 pm

DIN

54 வயதான ரவி தேஜா தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் த்ரினாதா ராவ் நக்கினா இயக்கத்தில் உருவான ‘தமாகா’ திரைப்படம் கடந்த வருடம் டிச.23ஆம் நாள் வெளியானது. 

அபிஷ்சேக் அகர்வால், டி.ஜி. விஷ்வபிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரவி தேஜாவுடன் ஸ்ரீ லீலா நடித்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது.  பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ள பாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ஜெயராம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  ரூ. 40 கோடியில் உருவான் இந்த திரைப்படம் தற்போது வரை 89 கோடி வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது. 10நாள் முடிவில் 100 கோடியை தொட்டுவிடும் என சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

தெலுங்கில் ராஜமௌலி படங்கள் வசூல் சாதனைப் புரிந்தது அனைவரும் அறிந்ததே. அதன் தயாரிப்பாளர் ஒரு முறை ராஜமௌலி அல்லாத படங்கள் இவ்வளவு வசூல் செய்யுமா என கேள்வி எழுப்பியவுடன் ‘நான் எஸ்எஸ்ஆர்’ என்ற புதிய வார்த்த்யை உபயோகித்தார்.  

இந்நிலையில், ரவிதேஜாவின் ரசிகர்கள் ‘நான் எஸ்எஸ்ஆர்’ (NON SSR) என்ற ஹேஸ்டேக்கைப் பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.