தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வாரிசு ரிலீஸ் தேதி உறுதி?: முன்பதிவை தொடங்கியது பிரபல திரையரங்கம்!

வாரிசு திரைப்படத்திற்கான முன்பதிவு இலங்கையில் தொடங்கியது. 

News image
Updated On :3 ஜனவரி 2023, 10:50 am

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 30 மில்லியன் (3கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் சமீபத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24 மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் யு கிடைத்துள்ளது. ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

தற்போது இலங்கை பிவிஆர் தியேட்டர்களில் வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் நாளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. எனவே வாரிசு திரைப்படம் 12ஆம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.