‘விஜய் 67’ படத்தில் களமிறங்கும் கேஜிஎஃப் வில்லன்!

‘விஜய் 67’ படத்தில் களமிறங்கும் கேஜிஎஃப் வில்லன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தில் கேஜிஎஃப் வில்லன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தில் கேஜிஎஃப் வில்லன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அடுத்த படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, விஜய் 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பணிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார்.

லோகேஷ் - விஜய்யின் முதல் படமான மாஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் தான் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க பான் இந்தியா ஆக்‌ஷன் படமாக உருவாகிறது விஜய் 67.

இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ்மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், நிவின் பாலி எனப் பலர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், கேஜிஎஃப் திரைப்படத்தில் வில்லனாக ஆதிரா கதாபாத்திரத்தில் அதிரவைத்த சஞ்சய் தத், விஜய் 67 படத்திலும் பவர்ஃபுல் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்த அப்டேட்டுகளால் விஜய் 67 படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com