வாரிசு படத்தின் ரன்னிங் டைம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கெனவே படத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வாரிசு படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது. அதில் படத்தின் நீளம் 2.50 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.