
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தம்பதி தங்களது செல்ல மகள் வாமிகாவின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.
வாமிகாவின் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, விராட் கோலி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இதுவரை பகிராத தனது மகளின் புகைப்படத்தைப் பகிர்ந்து எனது இதயத்துடிப்புக்கு 2 வயது என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில், இந்திய கிரிக்கெட் வீரர், கீழே படுத்திருக்க, அவரது செல்ல மகள் வாமிகா, அவர் மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் வாமிகாவின் தாய், அனுஷ்கா ஷர்மா தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது இதயம் விரிவடைந்தது என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தில், அனுஷ்கா ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரது மகிழ்ச்சிச் செண்டை கையில் ஏந்தியபடி இருக்கிறார்.
இவ்விரு புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட வினாடி முதல், அவரது ரசிகர்கள் தங்களது விருப்பங்களை குவித்து வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.
டிசம்பர் 11ஆம் தேதி விராட் - அனுஷ்கா ஜோடியின் திருமணம் இத்தாலியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவர்களுக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி வாமிகா பிறந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.