தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

'விஜய் 67' படத்தில் பிக்பாஸ் பிரபலம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 67 வது  படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2023, 9:02 am

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 67 வது  படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.

லோகேஷ் - விஜய்யின் முதல் படமான மாஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் தான் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாரிசு படத்தின் முதல் ஐந்து நாள் வசூல் உலகளவில் ரூ. 150 கோடி என அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.

காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க பான் இந்தியா ஆக்‌ஷன் படமாக உருவாகிறது விஜய் 67.

இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான்,  சஞ்சய் தத் எனப் பலர் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கொடைக்கானல் செல்ல உள்ளதாகவும் அதன்பின் காஷ்மீர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.