தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஏ.ஆர். ரஹ்மான் ஃபில்ம் சிட்டியில் விபத்து: லைட்மேன் பலி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2023, 12:12 pm

DIN

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் ஏ.ஆர்.ஆர். ஃபில்ம் சிட்டி என்ற ஸ்டுடியோ உள்ளது. சில படப்பிடிப்புகள் இங்கு நடைபெறும்.

இந்நிலையில், சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் படத்திற்காக ஏ.ஆர். ஃபில்ம் சிட்டி ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகின்றது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த லைட்மேன் குமார் என்பவர் இன்று காலை 40 அடி உயரத்தில் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு குமார் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கவரைப்பேட்டை காவல்துறையினர் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.