பிரம்மாண்டமாக உருவாகும் ‘தனுஷ் 50’
நடிகர் தனுஷின் 50-வது படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் தனுஷின் 50-வது படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்.17 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. தற்போது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும் தனுஷ் மீண்டும் இயக்குநராக புதிய படத்தினை இயக்குவார் எனத் தகவல் வெளியானது.
இதையும் படிக்க: த்ரில்லர் படமான 'ரன் பேபி ரன்' டிரெய்லர் வெளியானது
மேலும், சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இப்படத்தை தனுஷ் இயக்கி நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
We are happy and proud to announce #D50 with @dhanushkraja#D50bySunPictures #Dhanush50 pic.twitter.com/Y52RUonvUD
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...