சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் வெளியாகின. இறுதியாக ‘குலு குலு’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ திரைப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் அவருடைய 15-வது படமான ‘கிக்’ படத்தை லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்குகிறார்.
தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் பெங்களூரில் நடைபெற்றது. மேலும் சென்னை, பாங்காங், லண்டன் எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இசை - அர்ஜுன் ஜன்யா.
இந்நிலையில் சந்தானத்தின் 42வது பிறந்தநாளில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. காதல், நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக டிரைலரை பார்க்கும் போது யூகிக்க முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்க இலக்கியத்தில் கானல் நீர் - கனைகதிர் ஆவி!
அவிஷ்கா பெர்னாண்டோ சதம்: இலங்கை ஏ அணி 322 ரன்கள் குவிப்பு!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம்: நயினார் நாகேந்திரன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



