'மைக்கேல்' படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்!
விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘மைக்கேல்’ படத்தின் டிரைலரை பிரபல தெலுங்கு நடிகர் வெளியிட உள்ளார்.


புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மாநகரம்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘மைக்கேல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதியில் திரைக்கு வர உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் டிரைலரை பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா (நாளை) ஜன.23ஆம் தேதி வெளியிடுகிறார்.

நாளை காலை 9.30 மணிக்கு டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஸ்ரீ பரமரம்பா தியேட்டரில் நடக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...