ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தனுஷின் 50வது படத்தில் கதாநாயகி இவரா?

தனுஷ் நடிக்கும் 50-வது படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் கதாநாயகி துஷாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:22 pm IST

சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்.17 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. தற்போது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும்  தனுஷ் மீண்டும் இயக்குநராக புதிய படத்தினை இயக்குவார் எனத் தகவல் வெளியானது.

இப்படம் வட சென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

இந்நிலையில் இந்தப் படத்தில் துஷாரா விஜயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பட்ட பரம்பரை’ படத்தில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்ற நடிகையாக மாறினார். பின்னர் நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தில் ரெனே கதாபாத்திரத்தில் நடித்து சமூக வலைதளங்களில் உரையாடலையும் தொடங்கி வைத்தார். 

Story image

முக்கியமான கதாபாத்திரங்களை தேடி நடிக்கும் இவர் தற்போது தனுஷின் 50வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெய்ராம் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.