
எஸ்.ஜே. சூர்யா - பிரியா பவானி சங்கரின் நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படத்தின் புதிய அப்டேட்டை எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பொம்மை'. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இப்படத்தை மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் சாந்தினி, டவிட் செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகியது.
'பொம்மை' திரைப்படத்தின் முதல் பாடலான 'முதல் முத்தம்' என்ற பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.