மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’

‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ என்ற திரைப்படம்  ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில்  படமாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2023, 9:28 am

DIN

‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ என்ற திரைப்படம்  ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில்  படமாக்கப்பட்டுள்ளது.

ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் பேனரின் கீழ் பொம்மக் சிவா தயாரித்துள்ள இப்படத்தை ராஜு துசா எழுதி இயக்கியுள்ளார்.

Story image

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து முதல் பிரதி தயாராகிவிட்டது. விரைவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் டிரைலரும் வெளியாகவிருக்கிறது.

ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கால அளவு ஒரு மணி நேரம் மற்றும் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும்.  இந்த நேரத்தை  ஒரே ஷாட்டில் சுவாரசியமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.

Story image

தெலுங்கில்  இப்படி ஒரு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த படத்தில் எந்த பச்சை மேட்டையும் பயன்படுத்தாமல்  படமாக்கப்பட்டுள்ளது . ஒளிப்பதிவாளர் மற்றும்  இயக்குநரின்  திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

Story image

படத்தை முடித்து, முதல் பிரதியை படக்குழு பார்த்தபிறகு அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த முறையில் படம் வந்துள்ளதால்  ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிங்கிள் ஷாட்டில ஒரே ஒரு கேரக்டரை வைத்து சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஹன்சிகா கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.  ஹன்சிகா இந்தபடத்தில்  பாத்திரத்தோடு  வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் விதமாக படம் உருவாகியிருக்கிறது.

'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்' படம் ஹன்சிகாவின் கேரியரில் சிறந்த படமாக இருக்கும். படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.  ரீ-ரிக்கார்டிங்கிற்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

Story image

இயக்குநர் கதை சொல்லும் போது, ​​அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சிறப்பு கவனம் செலுத்தி பிஜிஎம்மை இசையமைத்திருக்கிறார் சாம்.  படம் முழுக்க தனது இசையால் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சாம்.

படம் ஒரே ஷாட்டில் ஓடுவதால், ஒளிப்பதிவாளர் கிஷோர் பாய்தாபு,  புதிய லைட்டிங் நுட்பத்தை இந்தபடத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜு துசா.

Story image

இந்தப் படத்தை மிகவும் கச்சிதமாக வடிவமைப்பதில் ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும்  அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளனர். முதன்முறையாக குறைந்த பட்ச வசனங்களுடன் ஒரே கதாபாத்திரத்தில் ஒரே ஷாட்டில் படம் எடுக்க, தயாரிப்பாளருக்கு தைரியமும் ஆர்வமும் தேவை. ஒரு துணிச்சலான தயாரிப்பாளராக பொம்மக் சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

விரைவில் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  விரைவில்  படம் தெலுங்கு மற்றும் பிற  மொழிகளிலும்  வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.