கன்னட மொழியில் எடுக்கப்பட்ட தொடரைத் தழுவி தமிழில் பேரழகி -2 என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதற்கு முன்பு கடந்த 2018ஆம் ஆண்டு பேரழகி முதல் பாகம் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு பேரழகி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற லக்சனா தொடரின் டப்பிங் தழுவலாகும். நக்ஷத்ரா, சுக்ருதா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இக்கதை 2 பெண்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழந்தைகளையும் 23 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் மாற்றி வைத்து விடுகிறார்.
இதில் நக்ஷத்ரா கருப்பாக இருப்பதால் அவரை மகளாகவும், பேத்தியாகவும் அவரது தந்தை - தாய் ஏற்றுக் கொள்ளவில்லை.
தானும் தனது மனைவியும் நல்ல சிவப்பு நிறத்தில் இருப்பதால், நக்ஷத்ரா தன்னுடைய மகளாக இருக்க முடியாது என்று அவரது தந்தை எண்ணுகிறார்.

வளர்ந்த பிறகு தொகுப்பாளராக வேண்டும் என நக்ஷத்ரா நினைக்கிறார். ஆனால் கருப்பாக இருப்பதால் புறக்கணிக்கப்படுகிறார். இறுதியில் வெள்ளையாக இருக்கும் சுக்ருதா நடிப்பதற்கு, நக்ஷத்ரா குரல் கொடுக்கிறார். சுக்ருதாவின் குரலால் ஈர்க்கப்பட்ட இளைஞர் சுக்ருதாவை காதலிக்கிறார். ஆனால் அந்தக் குரல் நக்ஷத்ரா உடையது. இவர்கள் மூவருக்குள் நடக்கும் கதையே பேரழகி.
இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சுக்ருதா - நக்ஷத்ரா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

இந்தியாவில் 125 புதிய விடுதிகள்: ஹில்டன்-ராயல் ஆா்க்கிட் ஒப்பந்தம்

உலக அறிவை பெற புத்தக வாசிப்பை வளா்த்துக்கொள்ள வேண்டும்!

வாக்குச் சேகரிப்பில் வாரிசுகள்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


