சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ராம் பொதினேனி, ஸ்ரீ லீலா நடிக்கும் ஸ்கந்தா: க்ளிம்ஸ் விடியோ வெளியீடு!

பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியின் ஸ்கந்தா படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. 

News image
Updated On :3 ஜூலை 2023, 10:02 am

DIN

தமிழில் அடையாளம் எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர் ராம் பொதினேனி. பின்னர் தெலுங்கில் படங்களை தொடர்ச்சியாஅக நடித்துவரும் ராம் பொதினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் திரைப்படம் சுமாரான வெற்றியே பெற்றது. இருப்பினும் பாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றது. 

இந்நிலையில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் படத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படம்தான் ஸ்கந்தா. இந்தப் படத்தினை எழுதி இயக்குகிறார் பொயபடி ஸ்ரீனு. ராம் சரண், அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா ஆகியோரது படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

பிரபல நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாக இந்தப் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்து மிகப்பெரும் ஆதரவினைப் பெற்றார். சிறிய வயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப் பழகியவர். இவரது பல்சர் பாடல் செம்ம வைரலானது. 

தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய படமாக உருவாக உள்ளது. 5 மொழிகளிலும் படத்தின் தலைப்பினை க்ளிம்ஸ் விடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. 

உலகம் முழுவதும் செப்.15ஆம் நாள் வெளியாகுமெனவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.