நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கணவருடன் பிரியங்கா! சீதா ராமனிலிருந்து விலகிய பிறகு வெளியிட்ட படம்!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, சீதா ராமன் தொடரிலிருந்து விலகினார். 

News image
Updated On :5 ஜூலை 2023, 11:21 am

DIN

சீதா ராமன் தொடரிலிருந்து விலகிய பிரியங்கா நல்காரி கணவருடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, சீதா ராமன் தொடரிலிருந்து விலகினார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீதா ராமன் தொடரில் முதன்மை பாத்திரத்தில் பிரியங்கா நல்காரி நடித்துவந்தார். இந்தத் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

சன் தொலைக்காட்சியில் பிரியங்கா நல்காரி நடித்த ரோஜா தொடர் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தது. இதன் எதிரொலியாக இவர் நடித்த சீதா ராமன் தொடரிலும் நல்ல வரவேற்பு இருந்தது.  

Story image

இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரியங்கா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு வெளிநாட்டில் கணவருடன் வாழ்ந்து வருகிறார். 

இதனிடையே தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்புக்கு வந்து செல்ல சிரமமாக இருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. மேலும், சீதா ராமன் தொடரிலிருந்து விலகுவதாகவும் சமீபத்தில் பிரியங்கா அறிவித்தார். 

Story image

பிரியங்கா நல்காரிக்கு பதிலாக ஸ்ரீ பிரியங்கா சீதா ராமன் தொடரில் நடிக்கத் தொடங்கியுள்ளார். 

இந்நிலையில், தனது கணவருடன் உணவகத்தில் நேரம் செலவிடும் வகையிலான புகைப்படத்தை பிரியங்கா நல்காரி பதிவிட்டுள்ளார். 

திருமணமானதுமுதல் அவ்வபோது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிடும் அவர், தற்போது முழுநேரம் கணவருடன் நேரம் செலவிடுவதை உணர்த்தும் வகையில் அந்த புகைப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.