கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குக் வித் கோமாளியில் வைல்டு கார்டு சுற்றில் நுழைந்தது யார்?

குக் வித் கோமாளியில் வைல்டு கார்டு சுற்றில் நுழைந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2023, 10:38 am

DIN

குக் வித் கோமாளியில் வைல்டு கார்டு சுற்றில் நுழைந்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின், கஜேஷ், ஆன்ட்ரியன் வெளியேறியுள்ள நிலையில், தற்போது சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, சுருஸ்டி, கிரண் ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் விசித்ரா முதல் இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் இரண்டாவது  இறுதிப் போட்டியாளராக மைம் கோபியும், மூன்றாவது இறுதிப் போட்டியாளராக சிவாங்கியும், நான்காவது இறுதிப் போட்டியாளராக சுருஸ்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், யாரும் எதிர்பாராத விதமாக கிரண் ஐந்தாவது  இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிலையில், வைல்டு கார்டு சுற்றின் மூலம் ஆன்ட்ரியன் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த எலிமினிஷென் சுற்றில் ஆன்ட்ரியன் வெளியேறிய நிலையில், அவர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.