
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் மனைவி தொடர் நூறு நாள்களை நிறைவு செய்துள்ளது.
சன் தொலைக்காட்சியின் தொடர்களுக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. அந்தவகையில் மூன்று மாதங்களுக்கு முன்பு அறிமுகமான மிஸ்டர் மனைவி தொடர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
ஜீ தமிழின் செம்பருத்தி தொடரில் நடித்த ஷபானா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ஷபானாவுக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார்.
வேலைக்குச்செல்ல வேண்டும், பொருளாதார ரீதியாக சுதந்திரமான இருக்க வேண்டும் என எண்ணும் பெண்ணும், வீட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய ஆணும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை நகர்த்தும் விதமே மிஸ்டர் மனைவி தொடரின் கதை.
இயக்குநர் சுலைமான் இந்தத் தொடரை இயக்கிவருகிறார். ரதி பாலா வசனம் எழுதுகிறார்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மிஸ்டர் மனைவி தொடர் ஒளிபரப்பாகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் தற்போது 100 எபிஸோடுகளை நிறைவு செய்துள்ளது. ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.