

கேப்டன் மில்லர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று ஜூலை 28-ல் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: விம்பிள்டனில் மீண்டும் விஜய்: வைரலாகும் போஸ்டர்!
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது சுட்டுரைப் பக்கத்தில், “ஜூலை 28-ல் சம்பவம் இருக்கு. கில்லர் கில்லர்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.