எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கைதி - 2 எப்போது?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி - 2 குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2023, 10:41 am

DIN

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதேபோல், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் ஞானவேலுடன் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், ரஜினியின் 172-வது படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க லோகேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். விக்ரம் படத்திற்குப் பின் கைதி - 2 படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார். தற்போது, 2024 இறுதியில் ரஜினி படத்தை முடித்துவிட்டு கைதி - 2 பணிகளை லோகேஷ் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.