புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

7ஜி ரெயின்போ காலனி - 2: விரைவில் படப்பிடிப்பு!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2023, 6:15 am

DIN

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாவது பாகத்திற்கான திட்டத்தில் செல்வராகவன் ஈடுபட்டிருந்தார். தற்போது, கதை, திரைக்கதை பணிகள் முடிந்ததுள்ளதல் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்பாகத்திலும் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நடிக்க அதிதி ஷங்கர் மற்றும் இவானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்.

இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு அடுத்தாண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.