பெண் வேடத்தில் கமல்ஹாசன்?
இந்தியன் - 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.
லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ.200 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க | 1000 பெண்களுடன் நடனமாடிய ஷாருக்கான்!
இந்நிலையில், இப்படத்தில் பெண் கதாபாத்திர தோற்றம் ஒன்றில் கமல்ஹாசன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக, கமல் தசாவதாரம் படத்தில் கிருஷ்ணவேணி பாட்டியாக பெண் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...