கயல் தொடரில் நடித்துவரும் நடிகை சைத்ரா ரெட்டி தனது பிறந்தநாள் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரையும் கயல் தொடர் கவர்ந்துள்ளது.
இதனால், சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் கயல் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் நடித்தவர்.
அந்தத் தொடரில் எதிர்மறை (வில்லி) பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது கயல் தொடரின் மூலம் நாயகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இவருக்கு சமூகவலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் சைத்ரா ரெட்டி தனது, 28வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன் புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். அதில், என் குடும்பம்தான் எனக்கு எல்லாமே. அதைத் தாண்டி சொல்ல எதுவும் இல்லை எனப் பதிவிட்டுள்ளார்.
சைத்ரா ரெட்டியின் பிறந்தநாளுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.