நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலகிருஷ்ணா புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட நடிகராவர். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 'தாத்தம்மா கலா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். அப்போது தெலுங்கு திரையுலகமும் பெரும்பாலும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது.
இதையும் படிக்க: லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன்?
அதன் பின் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார். 1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
கடைசியாக வெளியான இவரது படம் வீர சிம்ஹா ரெட்டி. இந்தப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இன்று பாலகிருஷ்ணா பிறந்தநாளை முன்னிட்டு பகவந்த் கேசரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் இவரது 108வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு

பலாவுக்கு மதிப்புக்கூட்டுத் தொழிற்சாலை தேவை!

தொகுதி அலசல் - ஒரத்தநாடு: வெற்றியை எதிா்நோக்கும் திமுக

தொகுதி அலசல் - குன்னம்: இழந்ததை மீட்க அதிமுக தீவிரம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


