பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லோகேஷ் படத்தில் இறக்க விரும்புகிறேன்: அனுராக் காஷ்யப்

லோகேஷ் கனகராஜ் படத்தில் சாக விரும்புவதாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 ஜூன் 2023, 6:17 am

DIN

லோகேஷ் கனகராஜ் படத்தில் சாக விரும்புவதாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முதற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.

இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றது. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

இவரது அடுத்த படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் அனுராக் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில், ‘லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் படங்களில் பெரிய கதாபாத்திரம் தேவையில்லை என்றாலும் புகழைப் பெரும் அளவிற்கு அவர் இயக்கத்தில் ஒரு சாகும் காட்சியில் நடிக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.