எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

த்ரிஷ்யம் 3: மலையாளம், ஹிந்தி ஒரே நேரத்தில் படப்பிடிப்பு? 

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான மிகவும் புகழ்பெற்ற த்ரிஷ்யம் படத்தின் 3வது பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :13 ஜூன் 2023, 4:02 pm

DIN

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3-ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

Story image

அப்படத்தின் தயாரிப்பாளர் ஆசிர்வாத் சினிமாஸ் - ஆண்டனி பெரும்பாவூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ‘த்ரிஷ்யம் 3’ உறுதி எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Story image

தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடும் இளைஞரை ஜார்ஜ் குட்டி(மோகன்லால்) மகள் அடித்துக் கொல்கிறாள். இந்தக் கொலையை மறைக்க ஜார்ஜ் தன் குடும்பத்தினருடம் எதிர்கொள்ளும் சவால்கள் எதிர்பாராத திருப்பங்கள் என த்ரிஷ்யம் கதைகள் உருவாக்கப்பட்டிருந்தது. மூன்றாம் பாகம் அதன் இறுதி பாகமாக இருக்குமெனவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் மலையாளம், ஹிந்தியில் ஒரே நேரத்தில் 2024இல் படப்பிடிப்பு நடத்தப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் த்ரில்லர் படங்களில் சஸ்பன்ஸ் முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.